/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்ட நீர்நிலைகள் மழைக்காலத்தில் நிரம்புமா: குறைவாக பெய்வதால் விவசாயிகள் கவலை
/
கடலுார் மாவட்ட நீர்நிலைகள் மழைக்காலத்தில் நிரம்புமா: குறைவாக பெய்வதால் விவசாயிகள் கவலை
கடலுார் மாவட்ட நீர்நிலைகள் மழைக்காலத்தில் நிரம்புமா: குறைவாக பெய்வதால் விவசாயிகள் கவலை
கடலுார் மாவட்ட நீர்நிலைகள் மழைக்காலத்தில் நிரம்புமா: குறைவாக பெய்வதால் விவசாயிகள் கவலை
ADDED : நவ 15, 2024 11:21 PM
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்யும் இயல்பான மழையளவு கூட, அதிகளவு மழை பெய்யும் நவம்பர் மாதத்தில் பெய்யுமா என்பதுகேள்விக்குறியாகி வருகிறது.
உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. நாம் பயன்படுத்தும் குளிர்சாதன இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் வாயுவினால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதன் விளைவாக கடல் நீர் மட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.
அத்துடன் கடல் நீரின் வெப்பம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக்குகிறது. சில இடங்களில் மழை பொழிவு இல்லாமலேயே வறட்சி நிலவுகிறது என்பது தவிர்க்க முடியாதது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். அதில் நவம்பர் மாதத்தில் தான் கனமழை கொட்டும். இந்த ஆண்டு அக்டோபர் 2 வது வாரத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. கடலுார் மாவட்டத்தில் 10 ஆண்டு சராசரி மழையளவு 1200 மி.மீட்டர் ஆகும்.
அதில் வடகிழக்கு காற்றின் மூலம் நமக்கு 697.5 மி,மீ., மழை பெய்ய வேண்டும். அக்டோபரில் 220 மி.மீ., மழை பொழிவதற்கு 213.36 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. இதில் 7 மி.மீ., குறைவாக பெய்துள்ளது. கனமழை பெய்யக்கூடிய நவம்பர் மாதம் 15 நாட்கள் உருண்டோடிவிட்டன. நவம்பர் மாதம் 295.30 மி.மீட்டருக்கு இதுவரை 94.73 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது.
இந்த மழையளவை ஒப்பிடும்போது, இதுவரை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெய்துள்ளது. இன்னும் 2 வாரங்கள் மட்டுமே தீவிர மழை பெய்யும் காலமாகும். பருவமழை காலத்தில் வங்கக்கடலில் 9க்கும் மேற்பட்ட புயல் சின்னம் ஏற்படுவது வழக்கம்.
இதன்காரணமாகத்தான் தமிழகத்திற்கு அதிகளவு மழை கிடைக்கிறது. தற்போதைய சூழலில் வங்கக்கடலில் இன்னும் ஒரு வாரத்திற்கு புயல்சின்னம் உருவாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எனவே நவம்பர் மாதத்தில் பெய்யக்கூடிய இயல்பான மழையளவை இந்த ஆண்டு எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கடலுார் மாவட்டத்தில் நீர் நிலைகள் சரிவர நிரம்பவில்லை.
கடலுார் மாவட்டத்தில் 228 ஏரிகள், நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் 100 சதவீதம் நீர் நிரம்பிய ஏரிகள் எதுவும் இல்லை. சிதம்பரம் பகுதியில் 75 முதல் 99 சதவீதம் வரை 7 ஏரிகள் மட்டும் நிரம்பியுள்ளன.
வெள்ளாறு பேசின் பிரிவில் (விருத்தாசலம்) மொத்தமுள்ள 210 நீர்நிலைகளில் 3 ஏரிகள்தான் முக்காமல் பாகத்தை எட்டியுள்ளன. 25க்கும் குறைவான ஏரிகள் 123 ம், தண்ணீரே இல்லாத ஏரிகள் 42ம் உள்ளன.
எனவே இந்த ஆண்டு பெய்யும் மழையில் ஏரிகள் நிரம்புமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.