தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாழநல்லுார் சாலை அகலப்படுத்தப்படுமா?

தாழநல்லுார் சாலை அகலப்படுத்தப்படுமா?

தாழநல்லுார் சாலை அகலப்படுத்தப்படுமா?


ADDED : அக் 25, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: தாழநல்லுார் தார்சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் - தாழநல்லுார் தார்சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி வாகனங்கள் உட் பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.

மேலும், திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், தாழநல்லுார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இச்சாலை பல ஆண்டுகளாக அகலப்படுத்த வில்லை. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு ஒதுங்க இடமின்றி உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும், இரவு நேரத் தில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலைப் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, தாழநல்லுார் தார்சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us