/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்படுமா?: அறுவடைக்கு தயாராக உள்ளதால் கோரிக்கை
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்படுமா?: அறுவடைக்கு தயாராக உள்ளதால் கோரிக்கை
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்படுமா?: அறுவடைக்கு தயாராக உள்ளதால் கோரிக்கை
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்படுமா?: அறுவடைக்கு தயாராக உள்ளதால் கோரிக்கை
ADDED : டிச 20, 2025 06:52 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் சம்பா சாகுபடி நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக, திறக்க விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர் .
காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டா பகுதியில், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் சம்பா பருவத்திற்கு ஏற்ற பி.பி.டி, பொன்மணி போன்ற நெல் ரகம் சாகுபடி செய்து வந் தனர்.
இந்தாண்டு தனியார் கடைகள், நெல் வியாபாரிகளிடமிருந்து புதிய நெல் ரகமான கே.என்.எம்.,16-38, அம்மன் சொர்ணா மசூரி, சவுபாக்கியா பொன்னி போன்ற, 120 முதல் 130 நாட்கள் கொண்ட நெல் ரகங்களை பயிர் செய்துள்ளனர்.
சாகுபடி செய்யப்பட்டுள்ள புதிய நெல் ரக பயிர்கள், தற்போது அறுவடை செய்யும் நிலையில் தயாராக உள்ளன.
வட கிழக்கு பருவ மழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதால், டெல்டா விவசாயிகள் இம்மாதத்திற்குள் அறுவடை செய்ய தயாராகி வருகின்றனர்.
அதனால் மாவட்ட நிர்வாகம் டெல்டா பகுதியில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகம் வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்டாலும், பணி ஆட்கள், சாக்கு, தார்பாய், எடை இயந்திரம் போன்றவை தயார் செய்து ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்.
மாவட்ட நிர்வாகம் வழக்கமாக செயல்படுத்தும் நடைமுறைகளை கடை பிடித்தால் இந்தாண்டு டிசம்பரில் அறுவடை செய்யும் விவசா யிகள் பெரிதும்பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக, டிசம்பர் மாதத்தில் திறந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
இதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

