தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிதி விடுவிக்கப்படுமா?

 முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிதி விடுவிக்கப்படுமா?

 முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிதி விடுவிக்கப்படுமா?


ADDED : ஜூன் 24, 2026 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓராண்டுக்கு மேலாகியு ம் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு, தி.மு.க., அரசு விடுவிக்காத நிதியை, விஜயின் புதிய அரசு விடுவிக்குமா என, ஒப்பந்ததாரர் கள் எதிர்பார்க்கின்றனர்.

கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், 2024-25 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கட்டடம் கட்டும் பணி, சாலைகள் அமைக்கும் பணி ஒதுக்கப்பட்டு, அந்தப் பணிகள் முடிக்கப்பட்டன.

அப்பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிதியை, மத்திய அரசு வழங்கியும், மாநில அரசு அந்த பணிகளுக்கு நிதியை விடுவிக்காமல், மாற்றுப் பணிகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெற்றிபெற்று, தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று, பல்வேறு சிறப்பு திட்டங்களை செய்து வருகிறார்.

எனவே செய்து முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், தி.மு.க., அரசு விடுவிக்காத நிதி யை, புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு விடுவிக்குமா? என ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us