/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருணாநிதியின் கனவு இல்ல திட்டம் பலிக்குமா?
/
கருணாநிதியின் கனவு இல்ல திட்டம் பலிக்குமா?
ADDED : பிப் 18, 2026 04:02 AM
க ருணாநிதியின் கனவு இல்ல திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல வீடுகள் கட்டுமானப்பணியில் உள்ளன. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளதால் தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஓட்டுகளை பெற கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில் கடலுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் உத்தரவு படி, ஊராட்சி செயலர்கள் மூலமாக விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலை ஆய்வு செய்ய கூறியுள்ளனர்.
உடனே அவர்களும் கனவு இல்லம் கேட்டு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வசிப்பிடத்திற்கு சென்று புகைப்படம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, உங்களுக்கு வீடு கட்ட அனுமதி கிடைத்துள்ளது என்பதை கூறிவிட்டு வந்து விட்டனர்.
கனவு இல்லம் கட்டப்போகிறோம் என்கிற 'கனவோடு' வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வந்து கேட்டால் வரிசைப்படிதான் கொடுப்போம், எல்லோருக்கும் கிடைக்காது, என்று கனவு இல்லம் கனவு பலிக்காது என்ற கூறி அனுப்பி விடுகின்றனர்.
ஏற்கனவே வீடு கட்டும் கனவோடு விண்ணப்பித்து கிடைக்காது என மனதை தேற்றிக்கொண்டு இருந்தவர்களை மீண்டும் உசுப்பிவிட்டு வீடு வந்துவிட்டதாக கூறி அலைகழிப்பது வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கைவந்த கலையோ என கிராம மக்கள் புலம்புகின்றனர்.

