/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் பகுதியில் நெல் அறுவடை தீவிரம் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
/
சிதம்பரம் பகுதியில் நெல் அறுவடை தீவிரம் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
சிதம்பரம் பகுதியில் நெல் அறுவடை தீவிரம் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
சிதம்பரம் பகுதியில் நெல் அறுவடை தீவிரம் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
ADDED : ஜன 20, 2025 05:57 AM

சிதம்பரம் : சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், சம்பா நடவு பணிகள் துவங்கி நடந்து வந்தது. சமீபத்தில் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது.அந்த நிலையிலும், மீண்டும் பயிர்களுக்கு உரமிட்டு, நெற்பயிர்களை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் இருந்தே அறுவடை பணிகளை விவசாயிகள் துவங்கி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, வெளி வியாபாரிகள் நெல் மூட்டையை 200 முதல் 400 வரை விலை குறைத்து எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனையடுத்து உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து. பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக வேறு வழியின்றி வெளி வியாபாரிகளிடம் நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திடீரென பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆகவே மேலும் திறக் கப்படாத கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, விவசாயிகளின் நெல் மூட்டைகளை வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.