/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுமா
/
அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுமா
அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுமா
அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுமா
ADDED : அக் 24, 2024 06:46 AM
கடலுார்: அரசு பள்ளிகளில், கடந்த காலங்களில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணத்தில் இருந்து (ஸ்பெஷன் பீஸ்) தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டு, மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
கட்டாய கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை. பள்ளி செலவுகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது.
விளையாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியும், பள்ளி இதர செலவுகளுக்கு செலவிடப்பட்டு விடுவதால் மாணவர்களை போட்டிக்கு அழைத்து செல்வதற்கு கூட உடற்கல்வி ஆசிரியர்கள் சொந்த பணத்தை செலவிட வேண்டிய நிலை உள்ளது.
ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டு பயிற்சி, அதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும். ஆனால், தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் சென்னையில் இருந்தே உபகரணங்களை அனுப்பி வைக்கின்றனர்.
அதில், தேவையில்லாத பொருட்கள் மட்டுமின்றி, தரமாகவும் வழங்குவதில்லை. உபகரணங்களும் குறைவாக அனுப்பி வைக்கின்றனர்.
அவை சேதமடைந்தால் புதியதாக வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அனுப்பும் விளையாட்டு பொருட்களும் தரமாக இில்லை.
இதுபோல பல்வேறு குளறுபடிகளால், விளையாட்டு உபகரணங்களுக்காக செலவிடப்படும் நிதி விரயமாகும் நிலை உள்ளது.
எதிர்காலத்தில் பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை கேட்டுப்பெற்று அவற்றை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டுகளுக்கு தேவையான முறையான உபகரணங்கள்
வழங்கப்படாததால், மாணவர்கள் முறையான பயிற்சி பெற முடியாத நிலை உள்ளதாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.