/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படுமா? காத்திருக்கும் விவசாயிகள்
/
அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படுமா? காத்திருக்கும் விவசாயிகள்
அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படுமா? காத்திருக்கும் விவசாயிகள்
அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படுமா? காத்திருக்கும் விவசாயிகள்
ADDED : டிச 15, 2025 06:52 AM

கடலுார்: பொங்கல் பண்டிகையொட்டி கரும்பை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தமிழக முதல்வர் கடந்த, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்பரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு முழு கரும்பு மற்றும் பொருட்கள் வழங்கிட உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறிஞ்சிப்பாடி, மதனகோபாலபுரம், பத்தரகோட்டை, பெய்காநத்தம், சிவநந்திபுரம், சத்தரம் உட்பட 10க்கும்மேற்பட்ட கிராமங்கள், விருத்தாசலம் பகுதிகளில் பன்னீர் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த கரும்பு பயிர்செய்யப்பட்டுள்ளது. தற்போது கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
இது குறித்து குறிஞ்சிப்பாடியை சேர்ந்த விவசாயி ராஜா கூறுகையில், ' கடந்த பொங்கல் பண்டிகையின் போது, அரசே கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்து வந்தது. அதேபோல வரும் 2026ம் ஆண்டு பொங்கலுக்கும் அரசு கரும்பை கொள்முதல் செய்து வழங்க வேண்டும்.ஆனால் இதுவரை கரும்பை கொள்முதல் செய்வது குறித்து அறிவிப்பு வெளியிடாமல் உள்ளது விவசாயிகளுக்கு கவலையைஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் கரும்பை கொள்முதல் செய்துபொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

