/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?
/
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?
ADDED : மார் 11, 2026 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் இணைப்பில், உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மூலம், மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேந்திரக்கிள்ளை வழியாக, பூவாலை பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் இணைப்பு செல்கிறது.
இந்நிலையில் சேந்திரக்கிள்ளை மெயின்ரோட்டில், கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்து, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி தேங்கி நிற்கிறது.
குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள், உடைந்த குழாய் இணைப்பை சீரமைக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

