/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சத்திரம் அருகே பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா
/
புதுச்சத்திரம் அருகே பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா
புதுச்சத்திரம் அருகே பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா
புதுச்சத்திரம் அருகே பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா
ADDED : பிப் 15, 2024 11:55 PM

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை - கடலூர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், தினமும் ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் புதுச்சத்திரம் அடுத்த மடவாப்பள்ளம் பகுதியில், முத்தான் ஓடையில் இணைப்பு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு கம்பிகள் வெளியில் தெரிகிறது.
மேலும் பாலத்தின் தடுப்புக் கட்டைகள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் பாலம் வலுவிழந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் செல் வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த பாலம் இடிந்து விழுந்தால், இப்பகுதி மக்க ளின் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற் படும். எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மடவாப் பள்ளத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க, சம்மந்தப்பட்ட அரசு அதி காரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.