ADDED : ஜன 17, 2026 06:15 AM

திட்டக்குடி: எரப்பாவூரில் பூட்டிக் கிடக்கும் கிராமப்புற நுாலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தில் கிராமப் புற நுாலகம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.
இதன் மூலம் கிராம இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தினசரி நாளிதழ் செய்திகள், பொது அறிவு, வரலாறு, அறிவியல் உட்பட பல்வேறு நுால்களை படித்து பயனடைந்து வந்தனர். சில ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நுாலகம் எவ்வித அறிவிப்பும் இன்றி பூட்டப்பட்டது.
இதனால் போட்டித் தேர் வுகள் மற்றும் பொது அறிவு தகவல்கள் தெரிந்து கொள்ள 10 கி.மீ., துாரமுள்ள பெண்ணாடம் கிளை நுாலகம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளதால் மாணவர்கள், இளைஞர்கள் அவதியடைகின்றனர். மேலும், நுாலகம் பூட்டியே கிடப்பதால் புத்தகங்கள், தளவாட பொருட்கள் பா ழாகி வருகின்றன.
எரப்பாவூரில் பூட்டிக்கிடக்கும் நுாலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
