/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் பூட்டிக்கிடைக்கும் மணிலா உடைப்பு ஆலை திறக்கப்படுமா! ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
விருதையில் பூட்டிக்கிடைக்கும் மணிலா உடைப்பு ஆலை திறக்கப்படுமா! ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு
விருதையில் பூட்டிக்கிடைக்கும் மணிலா உடைப்பு ஆலை திறக்கப்படுமா! ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு
விருதையில் பூட்டிக்கிடைக்கும் மணிலா உடைப்பு ஆலை திறக்கப்படுமா! ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 22, 2024 01:19 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் மணிலா பயிர்களை பிரித்தெடுக்கும் ஆலையை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கம்மாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் ஆடி பட்டம், கார்த்திகை பட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் போர்வெல், கிணறு மற்றும் மானாவாரியாக மணிலா சாகுபடி செய்து வருகின்றனர்.
அறுவடை செய்யும் மணிலா பயிர்களை விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், கார்த்திகை பட்டத்தில் அறுவடை செய்யும் மணிலா பயிர்களையும் மார்க்கெட் கமிட்டிக்கு எடுத்துவந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், மணிலாவை உடைத்து பயிர்களை பிரித்தெடுக்கும் தனியார் ஆலை ஒன்று மட்டுமே விருத்தாசலத்தில் தற்போது இயங்கி வருகிறது.
இதனால், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு மணிலா பயிர்களை விற்பனைக்கு கொண்டுவருவதற்கு முன் மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள மணிலா உடைக்கும் ஆலைக்கு விவசாயிகள் சென்று பயிர்களை பிரித்தெடுக்கும் அவல நிலை உள்ளது.
இந்நிலையில், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மணிலா உடைக்கும் ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்தது.இந்த ஆலை கடந்த நான்கு ஆண்டுகளுக்க முன் தனியார் ஒருவருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டது. அதில், விவசாயிகளுக்கு மணிலா பயிர்களை இலவசமாக உடைத்து தர வேண்டும் என ஒப்பந்தம் போட்பட்டது.
ஆனால், ஆலையை கான்ட்ராக்ட் எடுத்த நபர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பூட்டி வைத்துள்ளார். இதனால் விவசாயிகள் மணிலா பயிர்களை பிரித்தெடுக்க மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள மணிலா உடைக்கும் ஆலைகளுக்கு சென்று மணிலா பயிர்களை பிரித்தெடுக்கும் நிலை உள்ளது. இதனால் விருத்தாசலத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப்புற விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, விவசாயிகள் நலன் கருதி, மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் மணிலா உடைக்கும் ஆலையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.