/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் கொள்முதல் நிலையம் மதுராந்தகநல்லுாரில் திறக்கப்படுமா
/
நெல் கொள்முதல் நிலையம் மதுராந்தகநல்லுாரில் திறக்கப்படுமா
நெல் கொள்முதல் நிலையம் மதுராந்தகநல்லுாரில் திறக்கப்படுமா
நெல் கொள்முதல் நிலையம் மதுராந்தகநல்லுாரில் திறக்கப்படுமா
ADDED : ஜன 29, 2025 11:25 PM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த மதுராந்தகநல்லுாரில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கீரப்பாளையம் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சம்பா நெல் அறுவடை பணிகள் துவங்கி நடந்து வருகிறது. வியபாரிகள் குறைவான விலையில் சம்பா நெல்லை கொள்முதல் செய்வதால் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய ஆர்வமில்லாமல் உள்ளனர்.
ஒரு சில இடங்களில் மட்டுமே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மதுராந்தகநல்லுார், அதனை சுற்றியுள்ள பகுதியில் அறுவடை செய்த நெல்லை கடந்த குருவரை பருவத்தின்போது அரசு கொள்முதல் நிலையம் இயங்கிய இடத்தில் நெல்லை கொட்டி தார்பாய் போட்டு மூடியுள்ளனர்.
10 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்கள் அரசு நெல்கொள்முதல் நிலையம் திறந்து கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல் நிலையம் எப்போது திறப்பார்கள் என விவசாயிகள் நெல்குவியல்களை கொட்டி வைத்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.