ADDED : ஆக 23, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: அன்னப்பன்பேட்டையில் பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டையில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில், இங்கு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
இதில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் நின்று, பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இந்த பயணிகள் நிழற்குடை தற்போது பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, அன்னப்பன்பேட்டையில் பழுதடைந்துள்ள, பயணிகள் நிழற்குடையை சீரமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
