/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுமா?
/
போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுமா?
ADDED : செப் 27, 2025 12:03 AM
புவனகிரி: மருதுார் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்தி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி தாலுகா கடைகோடி பகுதியில் மருதுார் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த ஸ்டேஷனுக்கு என தனியாக இன்ஸ்பெக்டர் இல்லை. இதன் காரணமாக இந்த ஸ்டேஷன் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் உள்ளது. மருதுாரில் இன்ஸ்பெக்டர் இல்லாததால், சட்டம் ஒழுங்கு பிரச்னை, திருட்டு மணல் கடத்தல், அரசால் தடை செய்யப்பட்ட பொருள் விற்பனை என பல குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வியா பாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்தி, இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.