/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலை சீரமைக்கப்படுமா
/
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலை சீரமைக்கப்படுமா
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலை சீரமைக்கப்படுமா
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலை சீரமைக்கப்படுமா
ADDED : டிச 19, 2024 06:49 AM

கடலுார்; பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலையை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெருமாள் கோவில் தெரு வழியாக, பாதிரிக்குப்பம் மார்க்கத்தில் இருந்து கம்மியம்பேட்டை வழியாக செம்மண்டலத்திற்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பெருமாள் கோவில் தெருவில் ஒரு மாதத்திற்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக தார் சாலையை உடைத்து பள்ளம் தேண்டினர்.
இப்பணி முடிந்து, பள்ளத்தை ஜல்லிகள் மூலம் மூடியுள்ளனர்.
இதையடுத்து, தார் சாலை போடாததால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.