/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு பூங்கா சீரமைக்கப்படுமா
/
விளையாட்டு பூங்கா சீரமைக்கப்படுமா
ADDED : ஜன 29, 2025 11:18 PM
புதுச்சத்திரம், :   சிதம்பரம்  நடராஜர் கோவில், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு, சாமியார்பேட்டை கடற்கரை ஆகியவை இப்பகுதியில் சுற்றுலா பகுதிகளாக உள்ளன. இதில் சாமியார்பேட்டை கடற்கரைக்கு விடுமுறை நாட்களில் சுற்றுப்பகுதியை  சேர்ந்த, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு, சுற்றுலாவிற்கு வரும் குழந்தைகள் விளையாடும் வகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் உள்ள சீசா, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உடைந்து சேதமடைந்துள்ளன.
இதனால் சுற்றுலாவிற்கு வரும் குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது. எனவே சுற்றுலாவிற்கு வரும் சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சேதமடைந்துள்ள சாமியார்பேட்டை சிறுவர் பூங்காவை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

