த.வா.க., தனித்து போட்டியா?: தி.மு.க.,வினர் குழப்பம்
த.வா.க., தனித்து போட்டியா?: தி.மு.க.,வினர் குழப்பம்
ADDED : மார் 19, 2026 04:15 AM
பண்ருட்டி: த.வா.க. தனித்து போட்டியிட விருப்ப மனு பெற்று பண்ருட்டி, நெய்வேலி தொகுதியில் போட்டியிட உள்ளதால் தி.மு.க.வினருக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில், 93,801 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரனை விட 4,697 ஒட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். சொரத்துார் ராஜேந்திரன் 89104 ஒட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார்.
கடந்த 2023ம் ஆண்டு முதல் பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றிய பகுதி யில் நடந்த தி.மு.க. கட்சிக்கூட்டம் மற்றும் அமைச்சர் கணேசன் பங்கேற்ற அரசு விழாக்களில், அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் வரும் சட்டசபை தேர்தலில்பண்ருட்டியை சேர்ந்தவரே வேட்பாளர் ஒருவரே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பண்ருட்டி தொகுதியில் நடந்த அரசு விழாக்களில் கூட வேல்முருகன் எம்.எல்.ஏ., கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.
மேலும் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் பண்ருட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.
இதனால் பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் இருவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க., கூட்டணி கட்சி பேச்சுவார்த்தையில் வேல்முருகன் நெய்வேலி தொகுதி தான் வேண்டும் நெருக்கடி தந்து வந்தார். ஆனால் நெய்வேலி தொகுதியில் கடந்த, 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்த சபா ராஜேந்திரனுக்கு சீட் வழங்க வேண்டும். நெய்வேலி தொகுதியில் தி.மு.க., நின்றால், வெற்றி பெறும் என்பதால், த.வா.க.விற்கு சீட் வழங்கமுடியாது . அதானல் பண்ருட்டி தொகுதியிலேயே, அவரை போட்டியிட தி.மு,.க., கூறியதாக தெரிகிறது.
இதனால் வேல்முரு கன், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் கூட்டணி என தி.மு.க., தலைமைக்கு கோரிக்கை விடுத்தார். கடந்த, 15ம்தேதி பண்ருட்டியில் நடந்த தி.மு.க., கூட்டணி கட்சி போராட்டத்தில் த.வா.க.பங்கேற்க வில்லை.
மேலும் தமிழகம் முழுவதும் த.வா.க., சார்பில் தனித்து போட்டியிட விருப்ப மனு பெற்றனர். த.வா.க., விருப்பமனு பெறுவதால் தி.மு.க.வினரும் தி.மு.க.கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படும் என புலம்பி வருகின்றனர்.
