/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவில் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்படுமா?
/
விருத்தகிரீஸ்வரர் கோவில் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்படுமா?
விருத்தகிரீஸ்வரர் கோவில் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்படுமா?
விருத்தகிரீஸ்வரர் கோவில் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்படுமா?
ADDED : அக் 03, 2024 11:22 PM

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள நான்குமாட வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஒருவழி பாதையாக மாற்ற பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை - ஜெயங்கொண்டம், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பாக உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்கின்றன. நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடலுார் - சேலம், கடலுார் - உளுந்துார்பேட்டை மார்க்கங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப் பட்டன.
ஆனாலும், நகருக்குள் வரும் வாகனங்களால் நெரிசல் குறையாமல், பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை 200 மீட்டர் தொலைவை கடந்து செல்ல 10 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள், ஊர்வலத்தின்போது ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கிறது.
விருத்தகிரீஸ்வரர் கோவிலின் கிழக்கு கோபுர வாயில் வழியாக வேப்பூர் மார்க்கத்திற்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு நோயாளியுடன் செல்லும் ஆம்புலன்சுகள் நெரிசலில் சிக்கி, குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், கிழக்கு கோபுர வாசல் வழியாக வேப்பூருக்கும், அங்கிருந்து வரும் வாகனங்கள் மேற்கு கோபுர வாசல் வழியாகவும் திருப்பி விட வேண்டும்.
இதற்காக ஒருவழிப் பாதையாக மாற்றினால், கோவிலை சுற்றி வாகனங்கள் செல்லும்போது நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
மேலும், கோவிலின் பிரதான நுழைவு வாயிலான கிழக்கு கோபுர வாசலில் பக்தர்களின் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.
இதனால் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் நான்குமாட வீதிகளை ஒருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.