/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எங்களை மீறி எஸ்.பி.,யிடம் போனால் நடவடிக்கை எடுத்து விடுவோமா? எகத்தாளம் பேசும் சப் இன்ஸ்பெக்டர்

ADDED : செப் 03, 2025 07:28 AM
க டலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி ஆகிய சப் டிவிஷன்களும், அதில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும் உள்ளன.
கடந்த ஜனவரி மாதம், புதிய எஸ்.பி.,யாக ஜெயக்குமார் பொறுப்பேற்றார். அதன்பின், வாரம் தோறும் புதன் கிழமை பொதுமக்களிடமிருந்து புகார்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு சம்மந்தப்பட்ட டி.எஸ்.பி.,யிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வருகிறார்.
இதன் மூலம் பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதி ஒருவர், கனிமவள திருட்டு குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அதன் மீது முறையான நடவடிக்கை இல்லையென எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். புகாரை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கைக்காக எஸ்.பி., அனுப்பினார்.
புகார்தாரரை அழைத்துப் பேசிய சப் இன்ஸ்பெக்டர், 'எஸ்.பி.,யிடம் போனால் நடவடிக்கை எடுத்து விடுவோமா' எனக்கூறி அம்மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டார்.