sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் நிலைய பகுதியில் மின் கேபிள் புதைக்கும் பணிக்கு நிதி... கிடைக்குமா? மாவட்ட அமைச்சர்கள் முயற்சி மேற்கொள்வார்களா

/

பஸ் நிலைய பகுதியில் மின் கேபிள் புதைக்கும் பணிக்கு நிதி... கிடைக்குமா? மாவட்ட அமைச்சர்கள் முயற்சி மேற்கொள்வார்களா

பஸ் நிலைய பகுதியில் மின் கேபிள் புதைக்கும் பணிக்கு நிதி... கிடைக்குமா? மாவட்ட அமைச்சர்கள் முயற்சி மேற்கொள்வார்களா

பஸ் நிலைய பகுதியில் மின் கேபிள் புதைக்கும் பணிக்கு நிதி... கிடைக்குமா? மாவட்ட அமைச்சர்கள் முயற்சி மேற்கொள்வார்களா


ADDED : ஜூலை 18, 2024 08:31 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்டம், கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலால் பெரும் பாதிப்பை சந்தித்தது. 6ஆயிரத்திற்கும் மேற்பட்டமின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையத்திற்கு வரும் உயர்மின் கோபுரங்கள் சாய்ந்தன. மாவட்டத்தின் தலைநகரானகடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 4 நாட்களாக மின்சாரம் இல்லை. தலைமை செயலகத்திற்கு கூட தகவல் தெரிவிக்க மின்சாரம்இல்லாமல் அரசு அதிகாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடலுார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்க தமிழகத்தின் பாதிப்பில்லாத பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாளொன்றுக்கு 5ஆயிரம் மின் ஊழியர்கள் கடலுார் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணியாற்றினர். இரண்டு மாதங்கள் இடைவிடாமல்பணியாற்றி பின்பு தான் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த மின்தடையால் ஏற்பட்ட பாதிப்பு அரசுக்கு ஒருபாடமாக இருந்தது.

எதிர்காலத்தில் புயல், மழை, சுனாமி போன்ற பேரிடர் நிகழ்வின்போது மின்சாரம் முற்றிலும் தடை பட்டுவிடக்கூடாது என கருதி மின்கேபிள் அமைக்க வேண்டும் என அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன.

பேரிடரில் அடிக்கடி பாதிக்கப்படுகிற மாவட்டதலைநகரங்களில் கேபிள் போட முடிவு செய்யப்பட்டது. உலக வங்கி உதவியுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற கடலுார்,நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடலுார் மாநகரத்தை மட்டும் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் 2018 ம் ஆண்டு கடலுார் மாநகரில் 2 கட்டமாக டெண்டர் விடப்பட்டுபணிகள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது பணிகள் முடிக்கப்பட்ட 2, 3 பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டுகாலம் மின் கேபிள்வழியாக மின்சாரம் வழங்கப்பட்டுவருவதால் கடலுார சிப்காட் பகுதியில் தடையில்லா மின்சாரம் கிடைத்து வருகிறது.இதனால் தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் இயக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதால் பல லட்சம் ரூபாய் எரிபொருள் மிச்சமாகிஇருக்கிறது. அதேப்போல மின்வாரியத்திலும் மின்சாரத்தை நிறுத்தி வைத்து பழுது அகற்றுவதால் ஏற்படும் இழப்பும் குறைந்துள்ளதால்மின்வாரியத்திற்கும் லாபமாக உள்ளது.

முதல்பகுதி இதுவரை மின்சார கேபிள் போடப்படவில்லை. அண்ணா மேம்பாலத்திற்கு மேற்கில் உள்ள பஸ் நிலையம் அதைசுற்றியுள்ள பகுதிகள், திருவந்திபுரம் சாலையில் நகராட்சி எல்லை வரை, வடக்கு பகுதியில் கம்மியம்பேட்டை பாலம் வரையும்,தெற்கே மோகினிப்பாலம் வரையிலும் முதற்கட்ட பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன.

கடலுாரின் இதய பகுதியாக கடலுார் பஸ் நிலையம் முதல் பகுதியில் உள்ளடக்கியது. இப்பகுதியில் போக்குவரத்து மிகுதி,கடைவீதிகள் என்பதால் அதிகளவில் மக்கள் நடமாட்டம் என்கிற காரணங்களால் முதல்பகுதியை கடைசியில் முடிக்கலாம் எனமின்வாரியம் கருதியது. தற்போது மின்வாரியம் திட்டமதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு அனுப்பியுள்ளது. நிதிஒதுக்கீடு பெறப்பட்டதும் டெண்டர் விடும் பணி தொடங்கும்.

ஆனால் அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. இம் மாவட்டத்தில் உள்ள 2 அமைச்சர்கள் அரசிடம்பேசி நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us