ADDED : ஆக 23, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி மதுபாட்டில் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, குமளங்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்த அரசாயி, 55; என்பவர் வீட்டில் மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
உடன் வீட்டில் சோதனை செய்து 10 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்து அரசாயியை கைது செய்தனர்.