ADDED : ஜூலை 31, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே குடும்ப பிரச்னை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த வெட்டிக்குளத்தை சேர்ந்தவர் ராஜசேகர். கட்டட தொழிலாளி. இவரது, மனைவி வினிதா, 26; தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்படவே மனமுடைந்த வினிதா நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

