ADDED : ஜன 05, 2026 03:53 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீகுளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்த வீரமணி மனைவி உமா, 40; வீரமணி கடந்த பத்து நாட்களாக வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி ஊருக்கு திரும்பிய வீரமணியிடம் மனைவி உமா பணம் கேட்டுள்ளார்.இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த உமா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.
தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உமா சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
