ADDED : பிப் 05, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: சமையல் செய்தபோது சுவிட்ச் பாக்சில் கை வைத்த பெண், மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி உமாராணி, 40. நேற்று முன்தினம் காலை சமையல் செய்தபோது, சுவிட்ச் பாக்சில் கை வைத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.