/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் பஸ் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பெண் காயம்
/
சிதம்பரம் பஸ் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பெண் காயம்
சிதம்பரம் பஸ் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பெண் காயம்
சிதம்பரம் பஸ் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பெண் காயம்
ADDED : நவ 19, 2024 07:42 AM

சிதம்பரம்: சிதம்பரம் பஸ் நிலையத்தில் மீண்டும் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், பயணிகள் காத்திருக்கும் பகுதியில் கட்டட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அப்போது அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் தலையில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து, காயம் ஏற்பட்டது. மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால், அருகில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர். தற்போது மீண்டும் நடந்துள்ளதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிதம்பரம் பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள கடடடத்தின் கீழ் நிற்கவே அஞ்சுகின்றனர்.
தற்போது மழைக்காலம் என்பதால், தொடர்ந்து இதுபோல் விபத்துகள் நடைபெறும் என்ற அச்சம் அங்குள்ள வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.