/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த பணம் போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
/
ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த பணம் போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த பணம் போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த பணம் போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
ADDED : டிச 13, 2025 06:37 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை போலீஸ் நிலையத்தில், ஒப்படைத்த பெண்ணுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடியை சேர்ந்தவர் சிற்றரசு, 30; விவசாயி. இவர் பஸ் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் கார்டு மூலம், ரூ.10 ஆயிரம் பணம் எடுத்தார்.
ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து நீண்ட நேரம் ஆகியும் பணம் வராததால் பணம் இல்லை என நினைத்து வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அதே ஏ.டி.எம்., இயந்திரத்தில் காட்டுமன்னார்கோவில், குப்பு பிள்ளை சாவடியை சேர்ந்த செல்வ கணபதி மனைவி தனலட்சுமி பணம் எடுக்க சென்றார். ஏ.டி.எம்., இயந்திரத்தில் ரூ.10 ஆயிரம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது அந்த மையத்தில் யாரும் இல்லை. அந்த பணத்தை எடுத்து சென்று, காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். குருங்குடியை சேர்ந்த விவசாயி சிற்றரசு பணம் என உறுதி செய்து, அவரது தாயார் பூங்கோதையிடம் பணத்தை கொடுத்தனர்.
பணத்தை ஒப்படைத்த தனலட்சுமியின் நேர்மையை பாராட்டி, எஸ்.ஐ.,க்கள் சையத் அப்சல், நல்லதம்பி உள்ளிட்டோர், சால்வை அணிவித்தனர்.

