நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: முள்ளிகிராம்பட்டை சேர்ந்த சேகர் மனைவி மாரியம்மாள்,45; இவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தொடர்ந்து மழை பெய்த நிலையில், குளிர் தாங்காமல் விறகை தீயிட்டு கொளுத்தி, குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மாரியம்மாள் சேலையில் தீப்பிடித்தது. சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் தீக்காயமடைந்தவரை, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லிக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

