/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்கூட்டியில் இருந்து விழுந்து குழந்தைகளுடன் பெண் காயம்
/
ஸ்கூட்டியில் இருந்து விழுந்து குழந்தைகளுடன் பெண் காயம்
ஸ்கூட்டியில் இருந்து விழுந்து குழந்தைகளுடன் பெண் காயம்
ஸ்கூட்டியில் இருந்து விழுந்து குழந்தைகளுடன் பெண் காயம்
ADDED : நவ 03, 2024 06:59 AM
புவனகிரி: புவனகிரி அருகே நாய் துரத்தியதால், ஸ்கூட்டியில் இருந்து விழுந்து, பெண் மற்றும் இரு குழந்தைகள் காயமடைந்தனர்.
புவனகிரி அருகே பூ.மணவெளி ஐயனார் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மனைவி கவிதா. இவர் நேற்று முன் தினம், ஸ்கூட்டியில் மகள் பிரனிக்ஷா,12; மகன் அஷ்விந்த்,9; இருவரையும் அழைத்துக் கொண்டு குறிஞ்சிப்பாடி-புவனகிரி சாலையில் சென்றார். அங்குள்ள வயல்வெளியொட்டிய பகுதியில் சென்றபோது, நாய்கள் துரத்தியதில், ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். இதில், கவிதா உட்பட மூவரும் காயமடைந்தனர். அவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.