ADDED : டிச 08, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: நிலத்தகராறில் பெண்ணை தாக்கி, மானபங்கம் செய்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த குறவன்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி மனைவி பூமாதேவி, 45; அதே பகுதியை சேர்ந்தவர் கேசவன் மகன் முருகன், 55; இந்த இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முருகன் அவரது மகன் மணிவாசகன், 30; மற்றும் மனைவி அலமேலு, 45; ஆகியோர் சேர்ந்து பூமாதேவியை தாக்கி, மானபங்கம் செய்தனர்.
அவரது புகாரின் பேரில், மூவர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, முருகனை கைது செய்தனர்.

