/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலைபோல் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகள் விருதை பஸ் ஸ்டாண்டில் பெண்கள் அச்சம்
/
மலைபோல் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகள் விருதை பஸ் ஸ்டாண்டில் பெண்கள் அச்சம்
மலைபோல் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகள் விருதை பஸ் ஸ்டாண்டில் பெண்கள் அச்சம்
மலைபோல் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகள் விருதை பஸ் ஸ்டாண்டில் பெண்கள் அச்சம்
ADDED : ஆக 20, 2025 07:02 AM

க டலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புதுச்சேரி, பெங்களூரு, திருப்பதி உட்பட பிற மாநிலங்களுக்கும், சென்னை உட்பட பல்வேறு பெரு நகரங்களுக்கும் பஸ் வசதி உள்ளது.
மேலும், விருத்தாசலம் போக்குவரத்துக் கழக பணிமனை 1, 2ல் இருந்து குக்கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கல்வி, மருத்துவம், வியாபாரம் என பல்வேறு தேவைகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர்.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தையொட்டி, தனியார் மருத்துவமனை, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வந்தன.
அதில், ராட்சத வடிகால் செல்லும் நீர்நிலை புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள், சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இடித்து அகற்றப்பட்டன.
தற்போது, அந்த பகுதி முழுவதும் கட்டட கழிவுகள் மலைபோல் குவிந்து, சுகாதார சீர்கேடாகி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால், மறுமுனையில் உள்ள ஆலடி சாலையில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு சென்று வரும் பொது மக்கள், பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கட்டட கழிவுகள் குவிந்த பகுதியில் மறைவாக மது அருந்திவிட்டு வரும் குடிப்பிரியர்கள், பெண் பயணிகள், பொது மக்களிடம் அத்துமீறும் அசம்பாவிதம் அதிகரித்துள்ளது .
மேலும், வேலை முடிந்து செல்லும் பெண்களிடம் போதை ஆசாமிகள் ஆபசமாக பேசுவது, வழிப்பறி போன்ற சமூக விரோத குற்றச்செயல்களும் அதிகரித்து வருகிறது.
இதேபோல், கடலுார் சாலையில், ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே முல்லா ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளும் இதே நேரத்தில் இடித்து அகற்றப்பட்டது.
தற்போது, நகராட்சி நிர்வாகம் சார்பில் 2.40 கோடி ரூபாயில் முல்லா ஏரியை துார்வாரி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ஓரிரு நாட்களில் டெண்டர் விடப்பட உள்ளது.
ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக பஸ் ஸ்டாண்டில் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கட்டட கழிவுகளை அகற்றி, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட் ட நிர்வாகம் சிறப் பு நிதி ஒதுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.