/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சப் கலெக்டர் ஆபீஸ் எதிரில் பெண்கள் தர்ணா
/
சப் கலெக்டர் ஆபீஸ் எதிரில் பெண்கள் தர்ணா
ADDED : ஏப் 21, 2025 11:02 PM

சிதம்பரம்:
சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் அடுத்த அகரம் கிராமத்தை சேரந்த கோவிந்தசாமி என்பவருக்கு 5 பெண்கள், கலைமணி என்ற மகன் உள்ளனர். இவரது சகோதரி செல்வி, மற்றொரு சகோதரி குமுதாவின் 2 மகள்கள் என 3 பேரும், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த சிதம்பரம் நகர சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கோவிந்தசாமி இறந்த பின், மகன் கலைமணி அவரது பெயருக்கு மட்டும் சொத்துக்களை பட்டா மாற்றியுள்ளார். அந்த பட்டாவை ரத்து செய்து, தந்தையின் சொத்தை 5 பெண்களுக்கும் சேர்த்து பிரித்துக் கொடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.