ADDED : மார் 14, 2026 05:32 AM

அ நிறம் | அளவு
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மகளிர் தின விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கி பேசினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் மீனா ராஜேந்திரன் வாழ்த்தி பேசினார். விழாவில், மாணவர்களின் பெற்றோருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
