ADDED : மார் 11, 2024 05:22 AM

அ நிறம் | அளவு
கடலுார் : கடலுாரில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடந்தது.
மாநில தலைவர் அனுசியா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் காசிநாதன் முன்னிலை வகித்தனர். கருணாகரன் வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, மருத்துவ அலுவலர் தீபிகா ஆனந்தராமன் சிறப்புரையாற்றினர்.
அப்போது, சுகந்தி, ஜெயா, சுமதி, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் தமிழன் நன்றி கூறினார்.
