
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
மேல்புவனகிரி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் செல்வம். இவர் ஓய்வு பெற்றதையொட்டி பணி நிறைவு பாராட்டு விழா, புவனகிரி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். அலுவலக கண்காணிப்பாளர் பொன்முடி வரவேற்றார்.மேற்பார்வையாளர் அருள்சங்கு முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவனர் துரைமணிராஜன், பொருளாளர் சத்தியநாராயணன், தலைமை ஆசிரியர்கள் ராதிகா, இருதயராஜ், தவச்செல்வம், ராமசஞ்சீவி, சேகர், ராணமகேஸ்வரி வாழ்த்தி பேசினர். ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் செல்வம் ஏற்புரையாற்றினார்.

