ADDED : ஆக 18, 2026 07:22 PM
கடலுார், ஆக.19–கடலுார் சிப்காட்டில் இயங்காமல் உள்ள தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ம.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.அண்ணாதுரை பிறந்த நாள் மாநாட்டை முன்னிட்டு ம.தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் கண்டரக்கோட்டையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் மதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். மாநில பொருளாளர் செந்திலதிபன், கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியதேவன், மாவட்ட செயலாளர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினர். மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், கடலுார் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேல் வேலை வாய்ப்புக்கு கிடைக்கும் வகையில் துவக்கப்பட்டு இயங்காமல் உள்ள, தொழிற்சாலைகளை உடனடியாக மீண்டும் துவங்கி வேலைவாய்ப்பினை வழங்கிட மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
