/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்
/
தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்
தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்
தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்
ADDED : ஜன 29, 2025 06:54 AM

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு அம்மன் குளத்தில் நீர்நிரப்பும் பணி துவங்கியது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 3ம் தேதி மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக, மார்ச் 8ம் தேதி விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்வு நடக்கிறது.
11ம் தேதி பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி மாசிமகம், மாலை தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து, 13ம் தேதி நகராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. தெப்பல் உற்சவத்தன்று, பாலக்கரையில் உள்ள அம்மன் குளத்தில் சுவாமி உலா வருவது வழக்கம்.
இதற்காக அம்மன் குளத்தில் படர்ந்திருந்த செடி கொடிகள், குப்பைகள் அகற்றப்பட்டு, நீர் நிரப்பும் பணி துவங்கியது. இதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.