/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை - சேலம் புறவழிச்சாலையில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
/
விருதை - சேலம் புறவழிச்சாலையில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
விருதை - சேலம் புறவழிச்சாலையில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
விருதை - சேலம் புறவழிச்சாலையில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
ADDED : ஜன 29, 2025 06:55 AM

விருத்தாசலம்: 67 கோடி ரூபாயில் புதிதாக விரிவாக்கம் செய்யப்படும் புறவழிச்சாலையில் புதிதாக பாலம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், 2011ல் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி பிரிவு சாலை வரை புறவழிச்சாலை போடப்பட்டது.
அதன்பின், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து அரசு பழத்தோட்டம், செராமிக் தொழிற்பேட்டை வழியாக உளுந்துார்பேட்டை மார்க்கத்தில், ஜங்ஷன் சாலையுடன் புதிய புறவழிச்சாலை போடப்பட்டது.
இந்நிலையில், கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு வரை (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து வேளாண் அறிவியல் நிலையம் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 37 கோடி ரூபாயில் சர்வீஸ் சாலையுடன், புதிதாக மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது.
இதனால், மேம்பாலத்தில் இருந்து வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் புறவழிச்சாலை 67 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மணிமுக்தாற்றில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வரும். அதன்பின் தற்போதைய பாலம் வழியாகவும், புதிய பாலம் வழியாகவும் எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடியும் என நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் வசந்தபிரியா தெரிவித்தார்.

