/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணி துவங்கியது
/
பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணி துவங்கியது
பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணி துவங்கியது
பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணி துவங்கியது
ADDED : மே 08, 2025 01:33 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணியை சேர்மன் தேன்மொழி சங்கர் துவக்கி வைத்தார்.
பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை கடந்த 20 ஆண்டாக போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் இருந்ததால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
சாலையை சீரமைத்துத்தரக்கோரி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில்பரங்கிப்பேட்டை பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், புதியதாக தார்சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கான, துவக்க விழாவிற்கு சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, சாலை பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், பயணிகள் நலச்சங்க தலைவர் அருள்முருகன், பயணிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கலீல் பாகவி, மா.கம்யூ., வேல்முருகன், கவுன்சிலர்கள் தையல்நாயகி கணேசமூர்த்தி, ரொகையமா குன்முகமது, காங்., செய்யது அலி, அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

