/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரம்: நவீன மயமாகும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்
/
நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரம்: நவீன மயமாகும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்
நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரம்: நவீன மயமாகும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்
நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரம்: நவீன மயமாகும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்
UPDATED : ஜன 08, 2026 10:23 PM
ADDED : ஜன 08, 2026 05:58 AM

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக அடிப்படை, நவீன வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நீளமான கடற்கரை கடலுார் சில்வர் பீச். மாநகராட்சியின் எல்லைக்குள் தமிழகத்தின் புகழ்பெற்ற கடற்கரை பகுதிகளில் ஒன்றாக, இந்த கடற்கரை அமைந்துள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் மிக நீளமான கடற்கரை பகுதிகளில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
இது புகழ்பெற்ற கடல்மீன்களின் விற்பனைப் பகுதியாகவும், சிறுதொழில்கள் நிறைந்த பகுதியாக உள்ளதாலும், புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் நிறைய அமைந்துள்ளதாலும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் பொருந்திய கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையினை மேலும் ஈர்த்திடும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதோடு, நீலக்கொடி சான்று பெறும் பணிகளும் தற்போது தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன.
இந்த கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக அழகிய கண் கவர் நடைபாதைகள், பூங்கா, கடற்கரையில் ஓய்வெடுக்கும் பெஞ்சுகள், இயற்கை காற்றுவாங்கவும், ரசிக்கவும் தேவையான இருக்கைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமான கழிவறைகள், உடை மாற்றும் வசதிகளுடன் கூடிய குளியலறை, சூரிய ஆற்றல் உதவியுடன் இயங்கக்கூடிய வகையில்
மின்சார வசதிகள், ஓய்வெடுக்கும் பூங்காக்கள், விழாக்கள் நடத்தக்கூடிய மேடை அமைப்புகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மின்கம்பத்துடன் கூடிய அலங்கார மின் விளக்குகள், பாதுகாப்பு வசதிக்காக 4 கண்காணிப்பு கேமராக்கள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்லும் வகையில் பிரத்யேக நடைபாதை வசதி, மூங்கில் வளைவுகளுடன் கூடிய உட்காரும் நாற்காலிகள், மூங்கிலால் ஆன நிழற்குடைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

