/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
300 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் புனரமைக்கும் பணி தீவிரம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு
/
300 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் புனரமைக்கும் பணி தீவிரம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு
300 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் புனரமைக்கும் பணி தீவிரம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு
300 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் புனரமைக்கும் பணி தீவிரம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு
UPDATED : நவ 19, 2025 08:07 AM
ADDED : நவ 19, 2025 07:21 AM

கடலுார் மாநகரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த டச்சுக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பாரம்பரிய கட்டடங்களை தமிழக அரசு புனரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் சென்னைக்கு தெற்கே, 160 கி.மீ., தொலைவில் கடலுார் நகருக்கு அருகிலுள்ளது பிரிட்டிஷ் கோட்டையான செயிண்ட் டேவிட் கோட்டை.
அந்த கால கட்டங்களில், மெட்ராசின் ஆளுநர் எலிஹு யேல் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் வேல்சின் புரவலர் துறவியின் பெயரிடப்பட்டது .
கடந்த, 1690 ம் ஆண்டில் மராட்டியர்கள் கோட்டையை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு விற்றனர்.
தென்னிந்தியாவில் அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்ததால், நிறுவன அதிகாரிகள் 2வது கோட்டை வர்த்தக நிலையத்தை (சென்னையை தவிர) விரும்பத்தக்கதாகக் கண்டறிந்தனர்.
கடந்த, 18ம் நூற்றாண்டில், கோட்டை தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்தின் 2வது மையமாக மாறியது.
கடந்த, 1747-48 ம் ஆண்டில், பிரிட்டிஷ் கடற்படையின் உதவியுடன், மெட்ராசின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரெஞ்சு தாக்குதலையடுத்து கடந்த, 1758ம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
கடலுார் மாநகராட்சிப்பகுதியில் சில்வர் பீச் அருகே பராம்பரிய கட்டடங்களாக உள்ள துறைமுக மற்றும் மருத்துவஅலுவலர்கள் கட்டடங்களை புனரமைத்து மறுசீரமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 250-300 ஆண்டுகள் பழமைவாய்ந்த துறைமுக அலுவலர் பராம்பரியக் கட்டடம் மற்றும் 117 ஆண்டுகள், பழமை வாய்ந்த மருத்துவ அலுவலர் பராம்பரியகட்டடம் ஆகியவை சில்வர் பீச் அருகில்,
370 ச.மீ பரப்பளவுள்ள தரைதளம் மற்றும் 155 ச.மீ பரப்பளவுள்ள முதல்தளம் என மொத்தம் 525 ச.மீ பரப்பளவுள்ள துறைமுகஅலுவலர் கட்டடம் 4.90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் 215 ச.மீ பரப்பளவுள்ள தரைதளம் மற்றும் 227 ச.மீ பரப்பளவுள்ள முதல்தளம் என மொத்தம் 442 ச.மீ பரப்பளவுள்ள மருத்துவ அலுவலர் கட்டடம் 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பழமை மாறாமல்புனரமைக்கப்படவுள்ளன.
இதனால் எதிர்காலத்தில் வரும் சந்ததிகள் வரலாற்றை அறிந்து கொள்வதோடு, சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாறும்.

