ADDED : நவ 05, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, பூரணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சரவணன், 36; கூலித்தொழிலாளி. திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு சூதாடும் பழக்கம் இருந்ததால் பல இடங்களில் கடன் வாங்கியதில் கடனாளி ஆனார். பின், சொந்த வீட்டை விற்றுவிட்டு மணவெளியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டதால், மனஉளைச்சலில் இருந்த சரவணன், நேற்றுமுன்தினம் இரவு கம்பளிகாரன்குப்பம் சுடுகாடு அருகே உள்ள நிலத்தில் உள்ள தேக்கு மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

