தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

 லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

 லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : ஏப் 17, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்.

விருத்தாச்சலம் தாலுகா, பழைய நெய்வேலியை சேர்ந்தவர் சிவக்குமார், 54; மந்தாரக்குப்பம் பேட்டரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் வீட்டு வேலைக்காக பொருட்கள் வாங்குவதற்காக கடலுார் சென்றார். வீடு திரும்பும் வழியில் தம்பிப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே அவர் சாலையோரம் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்று திடீரென பின்புறமாக இயக்கப்பட்டது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய சிவகுமார் படுகாயமடைந்து மீட்கப்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் கிளியனுார், வைரவேல் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us