ADDED : மார் 18, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கூலி தொழிலாளி நிலை தடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்தார்.
கடலுார், பெரியகங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன்,51; சென்னையில் தங்கி ஓட்டலில் வேலை செய்தார்.
விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்தவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். வீட்டின் எதிரில் வந்த போது, திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்தார்.
உடன், மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே, சரவணன் இறந்து விட்டதாக கூறினர்.
புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
