UPDATED : செப் 21, 2026 06:11 PM
ADDED : செப் 21, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
வடலூர்:விபத்தில் தொழிலாளி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
புவனகிரி அடுத்த கொளக்குடி, மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 56. விவசாய கூலியான இவர் நேற்று முன்தினம் மாலை குறிஞ்சிப்பாடியில் உள்ள தனது அண்ணன் மகளை பார்க்க நடந்து சென்றார். வடலூர் அய்யன் ஏரி அருகே அவர் சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதில் படுகாயமடைந்த மணிகண்டன், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடிவருகின்றனர்.
