ADDED : பிப் 27, 2026 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு, வான்ராசன்குப்பத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுதாகர்,35; கூலி தொழிலாளி. நடுவீரப்பட்டு, ராணிப்பேட்டையை சேர்ந்த வேலாயுதம் மகன் புகழரசன்,26; நண்பர்களான இருவரும் நேற்று மாலை கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு பைக்கில் வந்தனர்.
வாழப்பட்டு அருகே வந்தபோது, கர்நாடாகாவில் இருந்து நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு மொலாசஸ் ஏற்றிவந்த டேங்கர் லாரி மோதியது.
இதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் புகழரசன், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

