ADDED : ஆக 30, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் பைக்கில் சென்ற மீன்பிடி தொழிலாளி, சென்டர் மீடியனில் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
கடலுார் தாழங்குடாவைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் வான்மகன்,28; மீன்பிடி தொழிலாளி. இவர், கடந்த 29ம் தேதி மீன்பிடித்து விட்டு பைக்கில் வந்த போது, பெரியகங்கணாங்குப்பம் சுடுகாடு பாலம் செல்லும் வழியி்ல் உள்ள சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
