தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலில் தத்தளித்த  தொழிலாளி மீட்பு 

கடலில் தத்தளித்த  தொழிலாளி மீட்பு 

கடலில் தத்தளித்த  தொழிலாளி மீட்பு 


ADDED : ஆக 30, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் தத்தளித்த தொழிலாளியை கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தினர் பத்திரமாக மீட்டனர். கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் விடுமுறை நாளான நேற்று மாலை ஏராளமான பொதுமக்கள் கூடினர். அப்போது, புவனகிரி அடுத்த கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலவன்,32; கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். 

திடீரென அவரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றதால் உயிருக்கு போராடினார். இவரின் அலறல் சத்தம் கேட்கவே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தினர், கடலில் இறங்கி உயிருக்கு போராடிய வேலவனை மீட்டு கரைக்கு அழைத்து வந்து அறிவுரை கூறி அனுப்பினர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us