நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் அடுத்த பனங்காட்டு காலனி சுனாமி நகரை சேர்ந்தவர் ரகுராமன், 31; இவருக்கு சுபாஷினி, 28; என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ரகுராமன் டீ கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடன் தொல்லை அதிகமானதால், மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.