ADDED : அக் 05, 2025 03:19 AM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: வயிற்று வலியால் அவதியடைந்த தொழிலாளி அதிக மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை, 60; கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.
கடந்த 3ம் தேதி, மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், 12 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
